USS george washington  Reuters
உலகம்

ஹார்முஸ் முதல் அமெரிக்கா வரை.. ஒரேநாளில் ரத்தான பல விமானங்கள்.. மிரட்டிய ஈரான்.. பின்னணி என்ன?

ஈரான் மீது உலகளாவிய விமானத் தடைகளை அமெரிக்கா தீவிரப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், அமெரிக்காவின் சொந்த விமானப் போக்குவரத்து அமைப்பே பெரிய சிக்கலைச் சந்தித்தது.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், USS George Washington என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

ஈரான் அரசு தொலைக்காட்சியான IRIB வெளியிட்ட செய்தியில் , மத்திய கிழக்கு கடல் பகுதியில் புதிதாக பணியில் அமர்த்தப்பட்ட USS George Washington விமானம் தாங்கிக் கப்பல் மீது ஈரான் தனது முதல் நேரடி தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளது.

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி, அதிநவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒன்று அமெரிக்க கப்பலின் மேல் வெடித்ததாக தெரிவித்தார். மேலும், அமெரிக்காவின் F-35 போர் விமானத்தையும் AWACS வான்வழி கண்காணிப்பு விமானத்தையும் சுட்டு வீழ்த்திய முதல் நாடு ஈரான்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Mohsen Rezaei

ஆனால், ஈரானின் இந்தக் கூற்றுகளை அமெரிக்கா இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. USS Abraham Lincoln-ஐ மாற்றி மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்ட George Washington, அமெரிக்காவின் முக்கிய தாக்குதல் திறன் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலாகும். ஈரான்–இஸ்ரேல் பதற்றம், ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் அமெரிக்காவின் இந்தக் கப்பல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதே நேரத்தில், அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெஸன்ட் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் நிறுவனங்கள், தரையிறக்க அனுமதி அளிக்கும் விமான நிலையங்கள் மற்றும் டிக்கெட் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் மீதி பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவின் புதிய Secondary Sanctions செப்டம்பர் 23 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஈரானின் விமானச் சேவைகள் உலகளவில் அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றன.

scott bessent

இதனால் எங்கள் விமானங்களைத் தரையிறக்க அண்டை நாடுகள் அமெரிக்காவுக்கு உதவினால், அவர்களின் விமான நிலையங்களும் இயங்காது. முடிவு உங்களுடையது என்று ஈரான் அண்டை நாடுகளைக் கடுமையாக எச்சரித்துள்ளது.

இதன் விளைவாக, ஈராக் பாக்தாத்துக்கான ஈரான் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கத்தார், ஜார்ஜியா, அசர்பைஜான் உள்ளிட்ட சில வழித்தடங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா மற்றும் இஸ்தான்புல் நோக்கிய சில சேவைகள் மட்டும் தொடர்வதாக கூறப்படுகிறது.

ஈரான் மீது உலகளாவிய விமானத் தடைகளை அமெரிக்கா தீவிரப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், அமெரிக்காவின் சொந்த விமானப் போக்குவரத்து அமைப்பே பெரிய சிக்கலைச் சந்தித்தது.

Newark International Airport,

பென்சில்வேனியாவில் உள்ள FAA தகவல் தொடர்பு மையத்தில் முதன்மை இணைப்பு செயலிழந்ததுடன், நியூ ஜெர்சியில் கட்டுமான பணியின்போது ஒரு கேபிள் தவறாக துண்டிக்கப்பட்டதால் Newark, JFK, LaGuardia, Philadelphia, Boston உள்ளிட்ட மிகப் பரபரப்பான விமான நிலையங்களில் 7000 விமானங்கள் தாமதமாகின மற்றும் ரத்தாகின. பின்னர் பழுதுகள் சரிசெய்யப்பட்டாலும், பயணிகள் பல மணி நேர தாமதத்தை எதிர்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.