ஈரான் போராட்டாக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காமேனி அதிரடி உத்தரவு web
உலகம்

ஈரான் | அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை.. உச்சநீதிமன்றம் பரிந்துரை!

ஈரானில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு... மரண தண்டனை விதிக்க ஈரான் உச்ச நீதிமன்றம் பரிந்துரை...

Rishan Vengai

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு மரண தண்டனை விதிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அயதுல்லா அலி காமேனி போராட்டக்காரர்களை சுட உத்தரவிட்டுள்ளார். இதனால் ஈரானில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை பரிசீலிக்கிறார்.

ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுடுவதற்கு உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொருளாதாரச் சரிவு மற்றும் அடக்குமுறைக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், இப்போது ஈரான் ஆட்சியையே உலுக்கிவருகிறது. போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் இதுவரை இரண்டாயிரத்து 571 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரான் போராட்டம்

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுடுவதற்கு ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனிஉத்தரவிட்டுள்ளார். மேலும் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

இந்தசூழலில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமான கத்தாரில் உள்ள அல்-உடெய்ட் விமான நிலையத்திலிருந்து சில பணியாளர்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

donald trump

ஈரான் மீதுராணுவத் தாக்குதல் நடத்துவது குறித்துஅதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தாரில் உள்ள தளத்திலிருந்து அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.