china, j10 c, iran x page
உலகம்

சீனாவிடமிருந்து அதிநவீன "J10C" போர் விமானங்களை வாங்கும் ஈரான்!

சீனாவிடம் இருந்து வலிமை வாய்ந்த J10 C ரக விமானங்களை வாங்க ஈரான் முடிவு செய்துள்ளது.

PT WEB

சீனாவிடம் இருந்து வலிமை வாய்ந்த J10 C ரக விமானங்களை வாங்க ஈரான் முடிவு செய்துள்ளது. ரஷ்யாவிடம் ஏற்கனவே சுகோய் 35 ரக விமானங்களை ஈரான் கேட்டிருந்த நிலையில் அவை வந்து சேர்வதில் நீண்ட தாமதம் நீடிக்கிறது. 50 விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் தற்போது வரை 3 மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. இந்த சூழலில் சீனாவின் J10 C விமானங்களை வாங்க ஈரான் முடிவு செய்துள்ளது. அண்மையில் முடிந்த போரில் இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களை பழமையான விமானங்களை வைத்துக்கொண்டு சமாளிக்க ஈரான் படைகள் சிரமப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

j10 c

இந்நிலையில் உடனடியாக வலிமை வாய்ந்த விமானங்களை தங்கள் படையில் சேர்க்க ஈரான் அவசரம் காட்டுவதாகவும் இதற்காக சீனாவை அணுகியுள்ளதாகவும் தெரிகிறது. ரஷ்யாவின் சுகோய் 35 விமானங்கள், இரட்டை இன்ஜின் கொண்டுள்ள நிலையில் சீனாவின் J10 C விமானங்கள் ஒற்றை இன்ஜின் மட்டுமே கொண்டவை. இருப்பினும் அதிநவீன வசதிகளும் வலிமையும் அதிகம். மேலும் 500 கோடி ரூபாய் வரை விலை குறைந்தவை. J10 C விமானங்களில் PL15 ரக ஏவுகணைகளை பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இதே ரக விமானங்களையும் ஏவுகணைகளையும்தான் இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானும் பயன்படுத்தியிருந்தது.