ஈரான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ஈரான் அதிபர் ஹஸன் ரொஹானி வலியுறுத்தியுள்ளார்.x
ஐ.நா. பொது அவையில் முதல் முறையாக உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடனான அணு ஒப்பந்தம் குறித்து ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐ.நா. அவையில் பேசிய ஈரான் அதிபர் ஹஸன் ரொஹானி, அணு ஒப்பந்தத்தை கைவிட்டால் அது அமெரிக்காவுக்கு தான் பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.