f-15e strike eagle fighter jet  Reuters
உலகம்

வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்கள்.. சிதைவுகளை குகையில் காட்சிப்படுத்திய ஈரான்!

‘ஆபரேஷன் எபிக் பியூரி’ நடவடிக்கையில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க–இஸ்ரேல் போர் ஜெட்கள், ட்ரோன்களின் சிதைவுகளை நிலத்தடி குகையில் காட்சிப்படுத்தி இராணுவ உளவுத் தகவல் சேகரிப்பை வலுப்படுத்தியுள்ளது ஈரான்.

PT WEB

ஈரான், 'ஆபரேஷன் எபிக் பியூரி' நடவடிக்கையில் வீழ்த்தப்பட்ட அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஜெட்கள் மற்றும் ட்ரோன்களின் சிதைவுகளை நிலத்தடி குகையில் காட்சிப்படுத்தியுள்ளது. இதில் F-15E 'DUDE 44' ஜெட்டின் ACES II எஜெக்ஷன் சீட், C-130, லிட்டில் பேர்ட்ஸ் ஹெலிகாப்டர்கள், MQ-9 ER, MQ-1, MQ-1C, ஹெர்ம்ஸ் 900 ட்ரோன்கள் உள்ளிட்ட பாகங்கள் இடம்பெறுகின்றன. இவற்றை ஆய்வு செய்து மீள்-பொறியியல் மூலம் புதிய ஆயுதங்கள் உருவாக்கும் திட்டம் உள்ளது.

செய்தியாளர் - M. மீரா

ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) ராணுவ நடவடிக்கையின் போது வீழ்த்தப்பட்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களின் சிதைந்த பாகங்களை ஈரான் தனது நிலத்தடி அறைகளில் காட்சிப்படுத்தியுள்ளது. எதிரி நாடுகளின் இராணுவத் தொழில்நுட்பங்களை வெளிப்படையாகக் காட்சிப்படுத்துவதும், அவற்றிலிருந்து உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும் ஈரானின் நீண்டகால மூலோபாய உத்தியாகும்.

wreckage of Aircrafts

இந்தக் கண்காட்சியில் மிகவும் முக்கியமானது, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஈரானுக்கு மேலே சுட்டு வீழ்த்தப்பட்ட 'DUDE 44' என்ற அழைப்புக் குறியீடு கொண்ட F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (00-3000) போர் ஜெட்டின் பாகங்கள் ஆகும். இங்கிலாந்தின் RAF லேக்கன்ஹீட்டில் உள்ள 48-வது ஃபைட்டர் விங்கிற்குச் சொந்தமான இந்த விமானத்தின் மேற்கூரை மற்றும் பாராசூட் மூலம் கீழே இறங்கக்கூடிய 'ACES II' எஜெக்ஷன் சீட் (ejection seat) ஆகியவை அதிக சேதமடையாமல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

லேக்கன்ஹீத் தளம் (Lakenheath) தன் வசமிருந்த F-15E மற்றும் F-35A லைட்னிங் II போர் ஜெட்களில் பாதியை இந்நடவடிக்கைக்காக அனுப்பியிருந்தது. மேலும், 'DUDE 44'-இன் ஆயுத அமைப்பு அதிகாரியை (WSO) மீட்கும் பணியின் போது, தற்காலிக தரையிறங்கும் தளத்தில் சிக்கியதால் அமெரிக்கப் படையினரால் வேண்டுமென்றே அழிக்கப்பட்ட C-130 விமானங்கள் மற்றும் MH-6/AH-6 லிட்டில் பேர்ட்ஸ் ஹெலிகாப்டர்களின் பாகங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

RAF Lakenheath airforce base

அமெரிக்க வான்படையின் 'மிகவும் மதிப்புமிக்க' சொத்தாகக் கருதப்படும் MQ-9 ரீப்பர்ஸ் (reapers), MQ-1 பிரிடேட்டர்ஸ் (predators) மற்றும் அமெரிக்க ராணுவத்தின் MQ-1C 'கிரே ஈகிள்' ட்ரோன்களின் பாகங்களும் இங்கு உள்ளன. இவை அதிநவீனமாக இருந்தாலும், குறைவான வேகம் மற்றும் தற்காப்பு அமைப்புகள் இல்லாமை காரணமாக எளிய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குக்கூட எளிதான இலக்குகளாக மாறுகின்றன.

இதில் இடம்பெற்றுள்ள ஒரு MQ-9 ரீப்பர் ட்ரோன், நான்கு-பிளேடு கொண்ட புரொப்பல்லரைக் கொண்டுள்ளது. சாதாரண ரீப்பர்கள் மூன்று-பிளேடு புரொப்பல்லரைப் பயன்படுத்தும் நிலையில், அதிக திறன் கொண்ட இந்த 'MQ-9 ER' ரகம் மொத்த பறக்கும் நேரத்தை 34 மணிநேரம் வரை அதிகரிக்கும் திறன் கொண்டது.

இவற்றுடன், மார்ச் மாதம் தனது ஆயுதங்களுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட இஸ்ரேலின் வரிசை எண் 923 கொண்ட 'ஹெர்ம்ஸ் 900' உட்பட பல்வேறு ஹெர்ம்ஸ் ட்ரோன்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

MQ 9 Reaper

மீள்-பொறியியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி:

வீழ்த்தப்பட்ட விமானங்களின் மின்னணு உபகரணங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து, 'மீள்-பொறியியல்' (Reverse Engineering) மூலம் புதிய ஆயுதங்களை உருவாக்குவது ஈரானின் வழக்கமாகும். இதற்கு முன், 2011-இல் இணையவழிப் போர்முறை (cyberwarfare) மூலம் அமெரிக்காவின் 'RQ-170 சென்டினல்' ஸ்டெல்த் ட்ரோனைத் தரையிறக்கிய ஈரான், 2016-இல் அதன் மாதிரியைக் கொண்டு 'சய்கே' (Saeqeh) என்ற புதிய போர் ஆளில்லா விமானத்தை இஸ்லாமிய புரட்சிகரப் படைப் பிரிவு (IRGC) மூலம் அறிமுகப்படுத்தியது. அதேபோல, தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இந்தச் சிதைவுகளும் ஈரானுக்குப் பெருமளவிலான இராணுவ உளவுத் தகவல்களை வழங்கக்கூடும்.