உளவு சொன்ன நபருக்கு மரண தண்டனை விதித்த ஈரான் web
உலகம்

உளவு சொன்ன நபருக்கு மரண தண்டனை.. ஈரான் அதிரடி!

ஈரான் தரவு மையங்கள், பாதுகாப்பு நிலைகள் குறித்து இஸ்ரேலுக்கு உளவு கூறியதாக கூறப்பட்ட புகாரில் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது ஈரான்.

PT WEB

இஸ்ரேலுக்கு உளவு பார்த்தகுற்றச்சாட்டில் ஒருவருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

பாபக் ஷபாஸி (BHAPAK SHABAZI) என்ற அந்த நபர் ஈரானிய தரவு மையங்கள் மற்றும் பாதுகாப்பு நிலைகள் குறித்தவிவரங்களை இஸ்ரேலுக்கு அளித்ததாககூறி, இத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்தநபரை அரசு கடுமையாக சித்ரவதை செய்து செய்யாத தவறை செய்ததாக கூற வைத்ததாக ஈரானிய மனிதஉரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலுக்கு எதிரான போரின்போது உளவு கூறிய புகாரில் ஈரான் இதுவரை 8 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.