உலகம்

சர்வதேச விமானக் கண்காட்சி தொடக்கம்

சர்வதேச விமானக் கண்காட்சி தொடக்கம்

webteam

ரஷ்யாவில் சர்வதேச விமானக் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஷூகோவ்ஸ்கை நகரில் 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை ரஷ்ய அதிபர் புதின் தொடங்கி வைத்தார். 

இதில் 200 வகையான வெவ்வேறு விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக ‘மிக்’ என்னும் சிறப்பு ரக விமானம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த கண்காட்சியில் ரஷ்யாவைச் சேர்ந்த 800 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அதேபோல், இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 180 நிறுவனங்கள் இந்த விமானக் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.