உலகம்

அம்மாடியோவ்! ஒரு பூனைக்கு இவ்வளவு விலையா?

webteam

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேசப் பூனைக் கண்காட்சி நடைபெற்றது. அதில் ரஷ்ய பூனை ஒன்று ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனையானது.

பூனை வளர்ப்பை அதிகரிக்க நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியில், ரஷ்யா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உயர் ரக பூனைகள் இடம்பெற்றன. இங்கு பூனைகளோடு அதற்குத் தேவையான மெத்தை, தலையணை, விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. அதில் ரஷ்ய பூனை ஒன்று ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனையானது.

ரஷ்ய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு பேர், பூனை வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பூனைகள் வைத்திருப்பவர்கள் தனியாகப் பதிவு செய்திருக்க வேண்டும், பூனைகளுக்கு என்று தனி பாஸ்போர்ட் இருக்கிறது. எஜமானர்களுடன் வெளியே செல்லும்போது உரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன.