உலகம்

தனிப்பட்ட சொத்து மதிப்பு: ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளிய இந்தியப் பெண்

தனிப்பட்ட சொத்து மதிப்பு: ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளிய இந்தியப் பெண்

JustinDurai

தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி, அந்நாட்டு நிதி அமைச்சரின் மனைவியும், இந்தியப் பெண்ணுமான அக்சதா மூர்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.

சண்டே டைம்ஸ் செல்வந்தர்கள் 2021 பட்டியலின்படி, ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,500 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டு நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவியும், இந்தியப் பெண்ணுமான அக்சதா மூர்த்தி (42) தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இன்போசிஸ் இணை நிறுவனரும், இந்தியாவின் பிரபல தொழிலதிபருமான நாராயண மூர்த்தியின் மகள்தான் அக்சதா மூர்த்தி. இன்போசிஸ் நிறுவனத்தில் அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.7000 கோடி (1 பில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இவைத்தவிர, சொந்த நிறுவனங்களில் இருந்து அக்சதா மூர்த்தி பல மில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

இதையும் படிக்க: பறந்த கோடீஸ்வரர்கள்... சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வணிகரீதியான பயணம் தொடங்கியது