உலகம்

இந்தோனேசியா: எரிமலை சீற்றத்தில் சிக்கி 13 உயிரிழப்பு; 41 பேர் காயம்

கலிலுல்லா

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. எரிமலை சாம்பலுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளதால் இறந்துள்ளவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் லுமாஜங் மாவட்டத்தில் உள்ள செமெரு எரிமலை நேற்று கடுமையாக சீறி தீக்குழம்பை கக்கியது. விண்ணை முட்டும் அளவுக்கு எரிமலை புகை எழுந்தது. இதில், தீக்காயம் பட்டு 13 பேர் உயிரிழந்த நிலையில் மற்ற நபர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

ஒரு கிராமம் முழுவதும் எரிமலை சாம்பல் படிந்துள்ளது. எரிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். சாலைகளிலும் கட்டடங்களிலும் வாகனங்களிலும் எரிமலை சாம்பல் படிந்து காணப்படும் நிலையில் அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழையும் பெய்துள்ளதால் எரிமலை சாம்பலில் நீர் கலந்து அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியுள்ளது.