உலகம்

மலைப் பாம்பு வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட பெண் ! பகீர் படங்கள்

மலைப் பாம்பு வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட பெண் ! பகீர் படங்கள்

rajakannan

இந்தோனிஷியாவில் காணாமல் போன பெண் 23 அடி நீள மலைப் பாம்பு உடலில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்தோனிஷியாவின் முனா தீவை அடுத்த பெர்ஷியபன் லாவெலா கிராமத்தைச் சேர்ந்தவர் வா திபா. 54 வயதான அவர் தன்னுடைய காய்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளார். வியாழன் இரவு அவர் காணாமல் போன நிலையில் அவரது உறவினர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

அப்போது, அந்த கிராமத்தில் 23 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று வயிறு புடைத்த நிலையில் கிடந்துள்ளது. அந்த பாம்பை பார்த்த கிராம மக்கள் அது தான் விழுங்கி இருக்க வேண்டும் என்று சந்தேகித்துள்ளனர். பின்னர், அந்த மலைப்பாம்பை நீள வாட்டத்தில் வெட்டியுள்ளனர்.

அப்பொழுது பாம்பின் உடலுக்குள் காணாமல் போனதாக கருதப்பட்ட திபா என்ற பெண்மணி சடலமாக கிடந்தார். இதனை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் விவசாயி ஒருவரை இதேபோல் பாம்பு விழுங்கியுள்ளது.

இந்தோனிஷியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருக்கும் மலைப்பாம்புகள் 6 மீட்டர் நீளத்திற்கு மேல் இருக்கும். இந்த பாம்புகள் சிறிய விலங்குகள் தாக்கி உண்ணும். சில நேரங்களில் மட்டும் தான் மனிதர்களை குறி வைத்து தாக்கும்.