உலகம்

26 அடி நீள ராட்சத மலைப்பாம்பை விருந்தாக்கிய கிராம மக்கள்

webteam

இந்தோனேசியரை தாக்கிய 26 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை, கிராம மக்கள் பிடித்து பங்கிட்டு சமைத்து சாப்பிட்டுவிட்டார்கள் என்று அப்பகுதியின் காவல்துறை அதிகாரி கூறினார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி சுடார்ஜா கூறுகையில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க நபாபான் என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார். காட்டுப்பகுதியில் சுமார் 26 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை கண்டுள்ளார். அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது கையை கடித்து இழுத்துள்ளது. பாம்பு கிட்டத்தட்ட அவரது கையை துண்டிக்க முயன்ற போது உடனிருந்தவர்கள் மலைப்பாம்பை தாக்கி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தக்க நேரத்தில் கிராம மக்கள் செய்த உதவியால், அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று கூறினார்.

பின்னர் அந்த ராட்சத பாம்பை பிடித்த கிராம மக்கள், அதனைக் கொன்று, பங்கிட்டு சமைத்து உட்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொதுவாக மலைப்பாம்பு 20 அடி இருக்கும். ஆனால் இது மிகப்பெரிய ராட்சத மலைப்பாம்பு என்றனர்.

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. பசியின் காரணமாக அங்குள்ள கிராம மக்கள் பாம்புகளை பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.