இந்தோனேஷியாவில் நீர்மூழ்கி கப்பலில் 53 வீரர்கள் உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு கடைசியாக பாடிய பாடல் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தோனேஷிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ நங்கலா என்ற நீர்மூழ்கி கப்பல் ஒரு வாரத்திற்கு முன்பு பாலித்தீவின் வட பகுதியில் மாயமானது. தேடுதல் பணி நடைபெற்ற நிலையில் கப்பல் மூழ்கியதாகவும், 53 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அரசு அறிவித்தது. இந்நிலையில் கப்பல் மூழ்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு TILL WE MEET AGAIN என்ற பாடலை குழுவாக அமர்ந்து வீரர்கள் பாடிய வீடியோ வெளியாகியுள்ளது.