உலகம்

ரைஸ் குக்குரை திருமணம் செய்து விவாகரத்தும் செய்த நபர்

ரைஸ் குக்குரை திருமணம் செய்து விவாகரத்தும் செய்த நபர்

webteam

இந்தோனேஷியாவை சேர்ந்த நபரொருவர் தனது ரைஸ் குக்கரை திருமணம் செய்து, தற்போது அதை விவாகரத்தும் செய்திருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

தனது ‘திருமண’ புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அவர், அந்த குக்கருக்கு பெண்களுக்கு அணிவது போன்ற வெள்ளை நிற முகத்திரையும் வாங்கி அணிந்திருக்கிறார். முகத்திரை அணிந்த அந்த குக்கரை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை, 2 வாரங்களுக்கு முன்பு பதிவிட்டு தனது திருமணத்தை அப்போது உறுதி செய்திருந்தார். உடன் தன் ‘மனைவி’ பற்றிய கேப்ஷனாக அவர் ‘அழகானவர், அதிகம் பேசாதவர், சொல்பேச்சு கேட்பவர், அன்பானவர், நன்கு சமைக்க தெரிந்தவர்’ என குறிப்பிட்டார்.

இந்த புகைப்படங்கள் யாவும் ஃபேஸ்புக்கில் வைரலாகி வந்த நிலையில், தற்போது அந்த திருமணம் முடிவுபெற்றிருப்பதாக அறிவித்துள்ளார் அவர். அதன் காரணத்தையும் குறிப்பிடுகையில், ‘என் மனைவி சாதம் மட்டுமே சமைக்கிறார். அதனால் நான் அவரை விவாகரத்து செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.