உலகம்

நீரில் மூழ்கப்போகிறதா ஜகார்தா ? புதிய தலைநகரை தேடும் இந்தோனேசியா

Rasus

இந்தோனேசியாவின் தலைநகராக உள்ள ஜகார்த்தாவுக்கு பதிலாக புதிய தலைநகரை அறிவிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.

இந்தோனேசியாவின் தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, உலகிலேயே வேகமாக கடல்நீரில் மூழ்கும் நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு காரணமாக 2005 முதல் 2050 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜகார்த்தா முழுமையாக கடலில் மூழ்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் அப்பகுதியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் இந்தோனேசியாவின் தலைநகரை மாற்றுவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் புதிய தலைநகர் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

புதிய தலைநகரம் அமைப்பதற்காக பரிசீலிக்கப்படும் இடங்களின் பட்டியலில் போர்னியோ தீவில் உள்ள காளிமாண்டன் மாகாணத் தலைநகரான பாலங்கராயா முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.