உலகம்

வங்கி கணக்கில் 1 கோடி ரூபாய் இருந்தால்.. இந்த நாட்டிலிருக்கும் சலுகை என்ன தெரியுமா?

Abinaya

வங்கி கணக்கில் 2 பில்லியன் இந்தோனேஷியா ரூபியா இருந்தால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு "இரண்டாம் வீட்டு" விசாவை இந்தோனேஷியா நாடு வழங்குகிறது.

இந்தோனேஷியா, பாலியை மையமாகக் கொண்டு தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் உலக பணக்கார குடிமக்களை ஈர்க்கும் விதமாக இந்தோனேஷியா நீண்ட காலம் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்ட புதிய ஒழுங்குமுறை சட்டத்தின் படி, வங்கி வங்கிக் கணக்குகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருப்பவர்களுக்கு ’’ இரண்டாம் வீட்டு" விசாவை வழங்குகிறது. ரிசார்ட் தீவில் நடந்த வெளியீட்டு விழாவின் போது, "இந்தோனேசியப் பொருளாதாரத்தில் நேர்மறையான பங்களிப்பை வழங்குவதற்காக , வெளிநாட்டினருக்கு இது ஒரு நிதி அல்லாத ஊக்கமான விசயமாக அமையும் என்று இந்த திட்டத்தின் செயல் இயக்குனர் ஜெனரல் விடோடோ எகட்ஜாஜானா கூறியுள்ளார்.


மேலும் அவர், ‘’இந்தோனேசியா, கோஸ்டாரிகா முதல் மெக்சிகோ வரையிலான நாடுகளின் பட்டியலில், தொழில் வல்லுநர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பிற வசதி படைத்தவர்களைக் கவர்ந்திழுக்க நீண்ட காலம் தங்குமிடங்களை இந்தோனேஷியா வழங்குகிறது. டிஜிட்டல் நாடோடிகள் என்று அழைக்கப்படும் படித்த தொழிலாளர் கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, தொலைதூரத்தில் தங்கள் வேலையைச் செய்யவும் , இடம்பெயர்வும் விருப்பங்கள் வளர்ந்து வருவதால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாலி சர்வதேச விடுமுறைக்கு வருபவர்களுக்கான நாட்டின் முக்கிய இடமாகவும், வெளிநாட்டு நாணய வருமானத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. எனவே பாலிக்கு பார்வையாளர்களை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நவம்பரில் பாலியில் நடைபெறவிருக்கும் ஜி-20 உச்சிமாநாடு பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகளை அழைத்து வருவதன் மூலம் தீவின் மீது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.