உலகம்

சீன உளவு கப்பலுக்கு ஷாக் கொடுத்த இந்திய செயற்கைக்கோள்கள்.. நடுக்கடலில் நடந்த சம்பவம்!

webteam

இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த சீன உளவு கப்பலின், உளவு வேலைகளை இந்திய செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் சில வாரங்களுக்கு முன் சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் - 5 நங்கூரமிடப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, அந்த கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி அங்கிருந்து யுவான் வாங் - 5 போர்க்கப்பல் புறப்பட்டது. இந்த கப்பல், இந்தியாவின் விமானப்படை தளங்கள், பாதுகாப்புத்துறை கட்டமைப்புகள், அணுசக்தி நிலையங்களை கண்காணிக்கும் என்ற அச்சுறுத்தல் எழுந்தது.

இச்சூழலில், கோள்களும் சீனாவின் உளவு கப்பலை அங்குலம் அங்குலமாக கண்காணித்து உள்ளன. குறிப்பாக சீன உளவு கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட சிக்னல்கள் ஜிசாட் 7 ஏ செயற்கைக்கோள் மூலமாக இடைமறிக்கப்பட்டு அந்த தகவல்கள் கண்காணிக்கப்பட்டன. சீன கப்பலில் செயற்கைக்கோள்களின் நடமாட்டத்தை கண்டறியும் வசதியுள்ளது. அதனை தடுக்க இந்தியாவின் ரிசாட் மற்றும் எமிசாட் உளவு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 4 செயற்கைக்கோள்கள் சீன உளவு கப்பலை கண்காணித்ததால், சீன உளவு அமைப்பால் இந்திய பாதுகாப்பு தகவல்களை கண்டறிய முடியவில்லை என கூறப்படுகிறது

இந்த கப்பல் இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தியாவின் விமானப்படை தளங்கள் மற்றும் பாதுகாப்புத்துறையின் கட்டமைப்புகள் அணுசக்தி நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு விட கூடும் என்ற அச்சுறுத்தல் இருந்தது. இந்நிலையில், இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்காக 2013ம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட்-7 மற்றும் 2018ம் ஆண்டு ஜிசாட்-7 ஏ இரண்டு அதி நவீன தகவல் தொழில்நுட்ப செயற்கை கோள்கள் சீனாவின் உளவு கப்பலை அங்குலம் அங்குலமாக கண்காணித்து உள்ளது.

குறிப்பாக சீன உளவு கப்பலிலிருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் ஜிசாட் 7 ஏ செயற்கைக்கோள் மூலமாக இடைமறிக்கப்பட்டு அந்த தகவல்கள் கண்காணிக்கப்பட்டது. குறிப்பாக இந்திய பாதுகாப்பு துறை சார்ந்த தகவல்கள் சேகரிக்கப்படாமல் இருப்பதற்காக இரண்டு சேர்க்கைகளும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனாவின் உளவு கப்பலை கண்காணித்து உள்ளது. இருப்பினும் சீனாவின் உணவு கப்பலும் செயற்கை கோள்களின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதால் அதனை தடுப்பதற்கும் இந்தியாவின் ரிசாட் மற்றும் எமிசாட் உளவு சேர்க்கை கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் இந்தியாவின் 4 செயற்கை கோள்கள் இலங்கையில் நங்கூரமிடப்பட்ட சீனாவின் உளவுக் கப்பலை தொடர்ச்சியாக கண்காணித்ததால் சீன உளவுக்கு அமைப்பால் இந்திய பாதுகாப்பு தொடர்பான ஆதாரங்களை கண்காணிக்க முடியவில்லை! இதன் காரணமாகவே சீனாவின் உளவு கப்பல் நீண்ட நாட்கள் இலங்கை துறைமுகத்தில் நிற்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.