உலகம்

ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸை பின்னுக்கு தள்ளிய இந்திய சிறுவன்

ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸை பின்னுக்கு தள்ளிய இந்திய சிறுவன்

webteam

இங்கிலாந்தைச் சேர்ந்த அர்னவ் சர்மா என்ற இந்திய சிறுவன் ஐ.க்யூ சோதனையில் பிரபல விஞ்ஞானிகள் அனைவரையும் விட அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளான்.

இங்கிலாந்து நாட்டில் பிரபலமான தேர்வாக கருதப்படுவது மென்சா ஐ.க்யூ தேர்வாகும். மனிதர்களின் நுண்ணறிவு திறனை சோதிக்கும் இந்த தேர்வில் பொதுவாக குறைவான தேர்வர்களே கலந்துக்கொள்வார்கள். ஆனால் இம்முறை நடைபெற்ற இந்த போட்டியில் அர்னவ் சர்மா உள்ளிட்ட 2 சிறுவர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்துக்கொண்டனர். பல்வேறு விதமான அறிவு சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்ட இந்த தேர்வை எழுதியவர்களில் பெரும்பாலானோர் தோல்வியடைந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் அர்னவ் 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாமேதைகளான அல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்றவர்களை விட அர்னவ் 2 மதிப்பெண்கள் அதிகமாக பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.