அமெரிக்காவின் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இந்திய மாணவர் ஒருவர் பட்டத்தை பெற்றுக்கொண்டு, பட்டம் வழங்கிய டீனின் காலில் விழுந்தார்.
காலில் விழுவது என்றால் என்னவென்றே தெரியாத அந்த அமெரிக்க டீன், மாணவர் எதையோ காலில் தடவி விட்டுப் போவது போல காலை பார்த்துவிட்டு புரியாமல் விழித்தார். இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.
சுயமரியாதைக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கும் அயல்நாடுகளில் இதுபோன்ற காலில் விழும் வழக்கங்கள் இல்லை, அதனால் அந்த டீன் திருதிருவென விழித்தார்.
நமக்குதானே தெரியும் காலில் விழும் மகத்துவம் என்னவென்று...