உலகம்

அமெரிக்காவில் தீபாவளிக் கொண்டாட்டம்: ஏராளமான இந்தியர்கள் பங்கேற்பு

webteam

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்கள் நேற்று தீபாவளிப் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் இதில் குடும்பத்துடன் பங்கேற்றனர். இந்த விழாவில் நடனம், விளையாட்டு, விருந்து போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்காவில் தீபாவளிக்கென பொது விடுமுறை இல்லாததால், வார விடுமுறை நாள்களில் பண்டிகையைக் கொண்டாடுவதை அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.