உலகம்

“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்

“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்

webteam

மனைவியை சுட்டுவிட்டு கணவரும் சுட்டுக் கொண்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அவர்கள் இந்திய தம்பதியனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் டெசாஸ் மாநிலத்தின் சுகர்லாந்து நகரத்தில் வசித்த இந்திய தம்பதியினர் சீனிவாஸ் (51) மற்றும் சாந்தி (46). இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் போது, துப்பாக்கியால் அவரது தலையில் சீனிவாஸ் சுட்டுள்ளார். இதில் சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர் வீட்டிற்கு வந்த சீனிவாஸ் படுக்கையறைக்கு சென்று கதவை அடைத்துக்கொண்டு சிறிய துப்பாக்கியால் தனது நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அருகில் இருந்த மற்றொரு அறையில் தூங்கிய அவரது மகள் (16), சுடும் சத்தம் கேட்டு தந்தையின் படுக்கையறை கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், அச்சமடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

காவல்துறையினர் வந்து கதவை திறந்து, சீனிவாஸின் உடலை கைப்பற்றினர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட சீனிவாஸ் ஹவுஸ்டானில் உள்ள நிறுவனம் ஒன்றில் இயக்குநனராகவும், கொல்லப்பட்ட சாந்தி கம்ப்யூட்டர் புரோக்கிராமராகவும் பணியாற்றி வந்தனர். இவரும் நல்ல நண்பர்கள் போல வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் இவர்களின் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தம்பதியினரின் நண்பர்கள் கூறியுள்ளனர். மேலும், சம்பவத்திற்கு காரணம் குறித்து சீனிவாஸ் ஒரு கடிதம் மெயிலை காவல்துறையினருக்கு அனுப்பியுள்ளார். விசாரணைக்கு பின்னரே அந்தத் தகவலை வெளியிட முடியும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.