உலகம்

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை - காரில் அமர்ந்திருந்த இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை - காரில் அமர்ந்திருந்த இந்தியர் சுட்டுக்கொலை

JustinDurai

அமெரிக்காவில் உள்ள பூங்காவில் காரில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி நபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்துவந்த இந்திய வம்சாவளி இளைஞர் காரில் அமர்ந்திருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்கவாழ் இந்தியர்கள் மீது இப்படியான தாக்குதல்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞரான சத்நாம் சிங், கடந்த சனிக்கிழமை அன்று தான் வசித்துவரும் வீட்டுக்கு அருகே உள்ள செளத் ஓஸோன் பார்க் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அமர்ந்திருந்தார். மாலை 3.46 மணி அளவில் அங்கு வந்த ஒரு நபர் சத்நாம் சிங்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதனம் சிங்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் மரணமடைந்தார்.

இந்தச் சம்பவம் அருகில் இருந்த ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அந்தக் காட்சியை ஆய்வு செய்துவரும் நியூயார்க் போலீஸார், குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து அதிகரித்து வருவது வாடிக்கையாகி விட்டது.

இதையும் படிக்கலாம்: வீட்டை துளைத்த ரஷ்ய ஏவுகணை... அசால்ட்டாக 'ஷேவ்' செய்த உக்ரைன் இளைஞர்!