ஈரானில் உள்ள இந்தியர்கள் அவசரமாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்கவும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், அவசர உதவிக்கான எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்கவும்.
ஈரானில் இருக்கும் இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய அரசின் தெஹ்ரான் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள், யாத்திரிகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட இந்தியர்கள் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி ஈரானைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஈரானில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், உள்ளூர் ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாஸ்போர் ட்மற்றும் அடையாள ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்கவும், தேவையான உதவிக்காக இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானில் சுமார் 10,000 இந்தியர்கள் வசித்துவருகின்றனர்.
இந்தசூழலில் ஈரானில் உள்ள இந்தியர்களின் அவசர உதவிக்காக தொலைபேசி எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளன. தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்யாத இந்தியர்கள், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஈரானில் இணைய சேவை இல்லாதபட்சத்தில் இந்தியாவில் உள்ள குடும்பத்தினர் பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர உதவி எண்கள்:
தொலைபேசி: +989128109115, +989128109109
தொலைபேசி: +989128109102, +989932179359
மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in