உலகம்

இந்திய தூதரக இப்தார் விருந்தில் பாக். புலனாய்வு அமைப்பு அநாகரிகம்!

இந்திய தூதரக இப்தார் விருந்தில் பாக். புலனாய்வு அமைப்பு அநாகரிகம்!

webteam

இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் விருந்தில் பங்கேற்ற விருந்தினர்களிடம், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர் அவமரியாதையாக நடந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம், இப்தார் விருந்துக்கு அங்குள்ள நட்சத்திர ஓட்டலான சரேனாவில் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொள்ளுமாறு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந் தது. அதன்படி இப்தார் விருந்தில் கலந்துகொள்ள விருந்தினர்கள் வந்தனர். அப்போது விருந்து நடந்த ஓட்டலை முற்றுகை யிட்ட பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர், கண்காணிப்பு என்ற பெயரில் விருந்தினர்களிடம் அவமரியாதையாக நடந்துகொண்டனர்.

(பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம்)

இதுபற்றி இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பேசிய, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா, ‘’கூடுதல் கண்காணிப்பு காரணமாக பல விருந்தினர்கள் தொந்தரவுக்கு உள்ளானார்கள். வெளியில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கி றேன். பலர் உள்ளே வரவே முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.

(சரேனா நட்சத்திர ஓட்டல்)

முன்னதாக, இந்த விருந்தில் பங்கேற்க இருந்த விருந்தினர்களுக்கு போன் செய்து, அதில் பங்கேற்க கூடாது என்றும் பங்கேற் றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் புலனாய்வு அமைப்பினர் மிரட்டல் விடுத்ததாகவும் செய்திகள் வெளி யாகியுள்ளன.