இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வராத நிலையில், அதுதொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்கா விதித்த 50% வரிவிதிப்புக்கு, இந்தியாவும் சத்தமே இல்லாமல் பதில் வரி விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கு வரவில்லை என்றால் இந்தியா மீதான வரி அதிகரிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீதான வரியை 500% வரை உயர்த்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க எம்.பி லிண்ட்சே கிரஹாம் கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வராத நிலையில், அதுதொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்கா விதித்த 50% வரிவிதிப்புக்கு, இந்தியாவும் சத்தமே இல்லாமல் பதில் வரி விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு அமெரிக்க செனட்டர்கள் அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு அமெரிக்க பருப்பு வகைகள் மீதான 30% இறக்குமதி வரியை நீக்குமாறு இந்தியாவை வலியுறுத்துமாறு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியுலகிற்குத் தெரிய வந்தது.
வடக்கு டகோட்டாவைச் சேர்ந்த கெவின் கிராமர் மற்றும் மொன்டானாவைச் சேர்ந்த ஸ்டீவ் டெய்ன்ஸ் ஆகியோர், கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி அமெரிக்க மஞ்சள் பட்டாணி மீது இந்தியா 30% வரி விதித்ததாகவும், அது நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்ததாகவும் குறிப்பிட்டு அதிபர் ட்ரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவுடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திற்கும் முன்னதாக, அமெரிக்க பருப்பு வகைகளுக்கு சிறந்த சந்தை அணுகலை உறுதி செய்யுமாறு செனட்டர்கள் ட்ரம்பை வலியுறுத்தி உள்ளனர்.
ட்ரம்பின் முதல் பதவிக் காலத்திலும் இந்த விவகாரம் குறித்து எழுதியதாக செனட்டர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்தியாவின் இந்த நடவடிக்கை, இந்தியா-அமெரிக்க உறவுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கும் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் பட்டாணி மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வடக்கு டகோட்டா மற்றும் மொன்டானா போன்ற விவசாய மாநிலங்களுக்கு இந்தப் பிரச்னை முக்கியமானது. உலகின் மிகப்பெரிய பருப்பு வகைகளை நுகர்பவராக உள்ள இந்தியா, உலகளவில் சுமார் 27% நுகர்கிறது.