அமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இந்து கோயில்
அமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இந்து கோயில் கூகுள்
உலகம்

அமெரிக்காவில் இந்து கோயில் அவமதிப்பு: போலீஸ் விசாரணை

Jayashree A

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நெவார்க்கில் இந்திய எதிர்ப்பு, மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்து கோயில் ஒன்று ( சுவற்றில் தவறான சித்தரிப்பு) சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியா நெவார்க்கில் உள்ள சுவாமிநாராயண் கோயிலின் வெளிப்புறச் சுவற்றில், காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் மற்றும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன என்றும், மேலும் கோயிலின் சில பகுதிகளும் சிதைக்கப்பட்டுள்ளதாக இந்து-அமெரிக்கன் அறக்கட்டளையால் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

முன்னதாக கோயிலின் வெளிப்புற சுவற்றில் கருப்பு மையைக்கொண்டு இந்து மற்றும் இந்திய எதிர்ப்பு பற்றி எழுதப்பட்டிருந்ததை பார்த்த பக்தர் ஒருவர் உடனடியாக கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இவரின் தகவலை அடுத்து அங்கு வந்த கோயில் நிர்வாகத்தினர், கோயிலின் மதில்சுவர் சேதப்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசில் புகாரளித்தனர். இது வேண்டுமென்று செய்யப்பட்ட சதிச்செயல் என்றும், இது குறித்து தீவிர விசாரணை தேவை என்றும் கோயில் நிர்வாகதினர் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகன்றனர்.

இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இது இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள், கோயிலை சேதப்படுத்திய நாசக்காரர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்திய தூதரகம் X தளத்தில் தெரிவித்துள்ளது.