உலகம்

இலங்கை எண்ணெய் டேங்கர் தீயை அணைக்க இந்தியா 2,200 கிலோ உலர் ரசாயனதூளை அனுப்பியது

Veeramani

இலங்கை கடலில் எண்ணெய் டேங்கரில் ஏற்பட்ட தீயை அணைக்க, இந்தியா 2,200 கிலோ உலர் ரசாயன தூளை கப்பல் மூலமாக அனுப்பியது.

இலங்கை கடற்கரையிலிருந்த ஒரு எண்ணெய் டேங்கரில் தீப்பிடித்ததை அடுத்து, அந்நாட்டு கடற்படையின் வேண்டுகோளின் பேரில் இந்திய கடலோர காவல்படை 2,200 கிலோ உலர் ரசாயன தூளை அனுப்பியுள்ளதாக கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 3 ஆம் தேதி எம்டி நியூ டயமண்ட் டேங்கரில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை, இலங்கை கடற்படைக்கு உதவி வருகிறது.

இந்த தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒருவர் காயமடைந்தார். கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது. ஆனால் கடுமையான வெப்பம் காரணமாக புதிய தீ ஏற்பட்டது. இப்போது அது கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.