உலகம்

மிக்-35 ரக போர் விமானங்களை ரஷியாவிடம் வாங்க இந்தியா திட்டம்

மிக்-35 ரக போர் விமானங்களை ரஷியாவிடம் வாங்க இந்தியா திட்டம்

webteam

மிக்-35 ரக போர் விமானங்களை ரஷியாவிடம் இருந்து வாங்க, இந்தியா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஷியாவின் மிக் ஏர்கிராப்ட் நிறுவனம் தயாரிக்கும் மிக் ரக போர் விமானங்களை, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனம் அதிநவீன மிக்-35 ரக போர் விமானங்களை உருவாக்கி உள்ளது. மற்ற நாடுகளின் போர் விமானங்களை ஒப்பிடுகையில், மிக் விமானத்தின் விலை 25 சதவீதம் குறைவாக உள்ளது. மேலும், இந்த விமானத்தில் உள்ள தொழில் நுட்பம் ஐந்தாம் தலைமுறை விமானத்தைப் போன்று அமையும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த போர் விமானங்களை, இந்தியாவிற்கு விற்க திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான டெண்டரை பெற இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் மிக் ஏர்கிராப்ட் நிறுவனம் தெவித்துள்ளது. இந்த அதிநவீன விமானங்களை வாங்க இந்தியாவும் ஆர்வம் காட்டி வருகிறது.

இதுகுறித்து மிக் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டரசெங்கோ கூறுகையில், இவ்விமானம் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று துல்லியமாக தாக்குதல் நடத்தக் கூடியது. மிக்-35 போர் விமானத்தை வாங்க இந்தியா தங்கள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விமானத்தை விற்பது மட்டுமின்றி 40 ஆண்டுகளுக்கு அதை பராமரிக்கும் பொறுப்பையும் நிறுவனமே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.