ரஷ்யாவின் கொரோனா மருந்தை பகிர்ந்துகொள்வது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் விரைவில் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்த இந்திய ஆராய்ச்சி மருத்துவ ஆணையம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்மையில் ரஷ்யாவில் மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியான ஸ்பட்னிக்-வி மருந்தை இந்தியாவில் பயன்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முதல் தடுப்பூசியை ரஷ்ய அதிபர் புதின் தனது நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த ஊசியை இந்தியாவிலும் பயன்படுத்துவது தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை ஆரம்பக் கட்ட தகவல்களை பெற்றுள்ளன. இந்திய மட்டுமின்றி யுஏஇ, சவுதி அரேபியா, பிரேசில் உள்ளிட்ட மேலும் பல நாடுகள் ரஷ்யாவின் மருந்தை பயன்படுத்த ஆர்வம் தெரிவித்துள்ளன.