கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் உலகில் வாழும், 780 கோடி மக்கள் தொகையில், 100 கோடி மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைத்துள்ளது. அத்துடன் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் சீர்குலைத்து விட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி 39 கோடியே 5 லட்சம் மக்களை வறுமைக்கு ஆளாக்கியுள்ளது.
உலக வங்கி வெளியிட்டிருக்கும் ஆய்வின் படி, நாள் ஒன்றுக்கு 150 ரூபாய்க்குக் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்துவோர் எண்ணிக்கை 100 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் தனிநபர் வருமானம் 20 சதவீதம் குறைந்துள்ளது. உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதுடன், ஐநாவின் வறுமை ஒழிப்பு முயற்சியைக் கிட்டத்தட்ட 20 முதல் 30 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி தள்ளக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.