உலகம்

இந்திய சீன எல்லை பிரச்சனை : வர்த்தக உறவை பாதிக்காது - சீனா

இந்திய சீன எல்லை பிரச்சனை : வர்த்தக உறவை பாதிக்காது - சீனா

webteam

இந்தியா சீன எல்லைப்பிரச்சனைகள் வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளை பாதிக்காகது என சீனா தெரிவித்துள்ளது. 

இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் இந்தியா-பூட்டான்-சீனா எல்லைகளை இணைக்கும் டோக்லாம் என்ற பகுதியில் சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. இதைத் தொடர்ந்து அங்கு இந்திய ராணுவம் வீரர்களை குவித்தது. தொடர்ந்து, சீனாவும் தங்களது ராணுவத்தினரையும் எல்லையில் குவித்ததால் அங்கு போர் மேகம் சூழ்ந்தது. 

இந்நிலையில், இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனை காரணமாக எல்லைப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாலும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என சீன வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.