உலகம்

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் அதிகம்: இலங்கை பிரதமர்

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் அதிகம்: இலங்கை பிரதமர்

webteam

கடந்த காலங்க‌ளைப் போல் இல்லாமல் இலங்கையில் தற்போது ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரம் அதிகம் இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று தொடங்கிய, ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள், ஜனநாயகத்திற்கு எதிரானவை என்றார். மேலும், இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தற்போதைய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயல் திட்டங்களை பாராட்டிய அவர், கடந்த காலங்க‌ளைப் போல் இல்லாமல் இலங்கையில் தற்போது ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரம் அதிகம் இருப்பதாக  தெரிவித்தார். கடந்த வாரத்தில் பத்திரிக்கையாளர் நவீன் ஸ்ரீவத்சவா உத்தரப் பிரதேச மாநிலத்தில் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல் பெங்களூரில் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது.