அமெரிக்காவின் அணு ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதம் இல்லாத உலகம் உருவாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் கூறியுள்ளார். ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வட கொரியாவில் எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். சீனா நினைக்கும் பட்சத்தில வட கொரியாவை கட்டுப்படுத்த இயலும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பிரச்னைக்கு இரு நாடுகள் என்ற தீர்வை தான் ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.