உலகம்

சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பின் கொரோனா பரவல் அதிகரிப்பு - ஒரே நாளில் 214 பேருக்கு பாதிப்பு

Veeramani

சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிக அளவாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

சீனாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் அங்கு 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு சீனாவில் பதிவாகும் அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இது. ஜிலின், சேண்டாங், குவாங்டாங் மாகாணங்களில் அதிக தொற்று பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தவிர அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வதாக சீனா அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சீனா அரசு பூஜ்ய கொரோனா தொற்று என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. ஒருவருக்கு தொற்று உறுதியானால் கூட, நகரம் முழுவதும் பொதுமுடக்கம் அமல் செய்து பரிசோதிப்பது , தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.