ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. அந்நாட்டின் புதிய பிரதமராக அந்தோணி அல்பனீஸ் பொறுப்பேற்க உள்ளார்.
151 இடங்களை கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவை. தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் வெல்வது உறுதியாகி உள்ள நிலையில், சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் உதவியுடன் அக்கட்சி ஆட்சி அமைக்கிறது. தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் ஸ்காட் மாரிசன், மக்கள் இதுவரை வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
புரட்சி அல்ல புதுப்பித்தல் என்ற முழக்கத்துடன் களம் கண்டு வெற்றி பெற்றுள்ள அந்தோணி அல்பனீஸ்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: தனி விமானத்தில் பாலியல் தொந்தரவா? - புகாரளித்த பணிப்பெண்ணுக்கு எலான் மஸ்க் சவால்!