உலகம்

வரி விதிப்பில் மிகப்பெரிய புரட்சி ஏற்படப்போகிறது: ட்ரம்ப்

வரி விதிப்பில் மிகப்பெரிய புரட்சி ஏற்படப்போகிறது: ட்ரம்ப்

webteam

அமெரிக்காவில் மிகப் பெரிய அளவுக்கு வரிகளை மாற்றி அமைக்கப் போவதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இண்டியானாபோலிஸ் நகருக்குச் சென்ற அதிபர் ட்ரம்ப் அங்கு குடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார். அப்போது வரி விவகாரங்களில் மிகப் பெரிய புரட்சி மாற்றம் ஏற்ப‌டவுள்ளது என்றும் இதன் மூலம் அமெரிக்க தொழிலாளர்கள் வெகுவாக பயன் பெறப் போகின்றனர் என்றும் தெரிவித்தார். மக்கள் விரும்பும் புதிய வரி முறைகளுக்கு உள்ள ‌தடைக்கற்களையும் நீக்கப் போவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.

தற்போது 35 சதவிகிதமாக வசூலிக்கப்பட்டு வரும் பெருநிறுவன வரிகள் 20 சதவிகிதமாக குறைக்கவும், 12, 25 மற்றும் 35 சதவிகிதத்தில் தனிப்பட்ட வரிகளை அறிமுகம் செய்யவும் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர வரி செலுத்துவதற்கான முறைகளை எளிமைப்படுத்த அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே செல்வந்தர்கள் பயனடையும் வகையிலேயே இந்த ‌வரி மாற்றம் இருக்கப் போவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.