உலகம்

ஒரே சமயத்தில் கொரோனா, குரங்கு அம்மை, எச்ஐவி.. மூன்றும் பாதித்த உலகின் முதல் நோயாளி!

JustinDurai

உலகில் முதன்முறையாக இத்தாலியை சேர்ந்த ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, எச்ஐவி ஆகிய மூன்றுவித நோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஸ்பெயினில் இருந்து திரும்பிய 36 வயதுடைய இத்தாலியர் ஒருவருக்கு 9 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி மற்றும் உடலில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட சில மணிநேரங்களில், அவரது இடது கையில் ஒரு சொறி தோன்றியது; பின்னர் அவரது உடலில் கொப்புளங்கள் தோன்றின. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி. என மூன்று நோய்கள் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதுவரை இப்படி ஒரே நேரத்தில் பல வைரஸ்களால் ஒருவர் தாக்கப்படும் செய்திகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இந்த நபர் முதலில் கொரோனாவிலிருந்தும், பின்னர் குரங்கு அம்மையிலிருந்தும் குணமடைந்தார். எச்ஐவி நோய்க்கான சிகிச்சை அந்த நபருக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: கொஞ்சம் கொஞ்சமாக இதயம் செயலிழக்கிறதா? வயிற்றில் தெரியும் அறிகுறிகள் - அதை கவனியுங்கள்!