உலகம்

உயிருள்ள பறவைகள் துணி துவைத்தால்… கிட்டார் வாசித்தால்! அசத்தும் கர்லி அனிமேஷன்கள்

sharpana

உயிருள்ள பறவைகள் துணி துவைத்தால்… கிட்டாரிஸ்டாகமாறி கிட்டார் வாசித்தால், செல்ஃபி எடுத்தால் எப்படியிருக்கும்? நினைக்கும்போதே ஆச்சர்யமாக இருக்கிறதா?

அப்படிப்பட்ட வீடியோக்களை அனிமேஷன் செய்து இன்ஸ்டாகிரம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து கொரோனாவால் முடங்கிப்போயியுள்ள மக்களின் மனங்களை புத்துணர்ச்சியூட்டி வருகிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த டங்கன் எவன்ஸ். அதுவும், முழுக்கவே அனிமேஷன் அல்லாமல் உயிருள்ள பறவைகளின் செயல்பாடுகளை வைத்தே, வீடியோக்களை உருவாக்கி கண்களையும் மனதையும் கிறங்கடிக்க வைக்கிறார்.

மனித கைகளுடன் காக்கா, கழுகு, வாத்து, பென்குயின் போன்ற பறவைகள் செல்ஃபி எடுத்தல், அலுவலக ஃபைல்களுடன் நடந்து செல்லுதல், அழகாக குடை பிடித்தல், உடற்பயிற்சி செய்தல், மீன்களை விற்றல், துணி துவைத்தல், செல்ஃபோன் பேசுதல் போன்றவற்றை வீடியோவாக்கி தனது ‘curely kid life’ பக்கத்தில் வெளியிட்டு உலக மக்களின் பாராட்டுகளை குவித்துவிட்டார்.

’இந்த வீடியோக்கள் கொரோனா துயரில் தங்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக’ நெட்டிசன்கள் புகழ்ந்துதள்ளிக் கொண்டிருக்கிறார்கள். கைகள் கொண்ட பறவைகளின் வீடியோவை, இதுவரை ட்விட்டரில் 6 மில்லியன் பார்வையாளர்களும், மூன்று லட்சத்திற்கும் மேலான லைக்குகளையும் ஒன்றரை லட்சம் ரீட்விட்டுகளையும் அள்ளிக் குவித்திருக்கிறது.

டங்கன் எவன்ஸ்

பறவைகள் மட்டுமல்ல மனிதர்களின் உணர்வுகளுக்கும் உயிர் கொடுத்து வீடியோவாக வெளியிட்டு லைக்குகளை குவித்துள்ளார். மேகத்தில் ஊஞ்சல் கட்டி மனிதன் ஆடுவது போலவும், வீடுகள் கால்களோடு நடப்பது, நாய்கள் மற்றும் மாடுகள் காமெடி செய்வது போன்ற பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து சிரிக்க வைக்கிறார். குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் செயல்களை காமெடியான வீடியோவாக்கியிருப்பது அல்டிமேட் ரகம். அதைப் பார்ப்பவர்கள் நிச்சயம் மனம் விட்டு சிரிப்பார்கள். சிரிப்புப் புயல் வடிவேலு நிச்சயம் ஞாபகம் வருவார். Curly kid life என்ற யூட்யூப் சேனலிலும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்.