அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியபோது, “ஜனாதிபதி அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளருக்கு எதிராக ஓடுவது எனக்கு அழுத்தம் கொடுக்கிறது. நான் தோற்றால் உங்களால் கற்பனை செய்ய முடியுமா? நான் என்ன செய்யப் போகிறேன்?
ஒருவேளை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால், வரலாற்றிலேயே மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வி அடைந்த எனது வாழ்க்கையே வீண் என கருதி நாட்டை விட்டு வெளியேறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.