உலகம்

இந்திய சேனல்கள் பார்த்து ஹிந்தி கற்றுக்கொண்டேன்: மலாலா...!

இந்திய சேனல்கள் பார்த்து ஹிந்தி கற்றுக்கொண்டேன்: மலாலா...!

webteam

இந்தியாவை பற்றி பேசுகையில் பெரும் உற்சாகத்துடன் பேசிய மலாலா, இந்தியாவில் இருந்து எனக்கு கிடைத்திருக்கும் அன்பும், ஆதரவும் மிகப்பெரியது, நான் அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புறேன் என்றார். 

தற்பொழுது 20 வயதாகும் மலாலா தனது 17ஆவது வயதிலேயே நோபல் பரிசினை பெற்றவர். மிகச் சிறு வயதிலேயே சமாதானத்திற்கான நோபல் பரிசினை பெற்று சாதனை படைத்தவர். 

சமீபத்தில் இவர் ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுயிருந்தார். அங்கு பல நாட்டு தலைவர்களையும், பல நிறுவனங்களின் சிஇஒகளையும் சந்தித்தார் மலாலா. உலகெங்கிலும் உள்ள பெண் கல்விக்காக முதலீடு செய்ய முற்படும் மலாலா, அதற்காக அவர் குல்மாக்கி நெட்வொர்க் என்ற அமைப்பின் மூலம் நிதி திரட்டி வருகிறார். குல்மாக்கி நெட்வொர்க் என்பது மலாலா உபயோகிக்கும் பேனாவின் பெயராகும். இந்தியாவிலும் குல்மாக்கி நெட்வொர்க்கை விரிவுபடுத்த மலாலா விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்திய மக்களுடன் பணியாற்றவும், அவர்களது பிரச்சினைகளை புரிந்துகொண்டு தேவைகளை நிறைவேற்ற விருப்புகிறார்.

இந்தியாவைப் பற்றி பேசிய மலாலா, இந்திய மக்களிடம் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு மிகப்பெரியது. இந்திய மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவின் பிரதம மந்திரியாக நான் ஆக வேண்டும் என பெண் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார், "ஒருநாள் நாங்கள் இருவரும் பிரதம மந்திரிகளாக இருப்போம், பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று அக்கடிதத்தை நினைவு கூர்ந்து மலாலா பேசினர்.

மேலும், நான் இந்திய நாடகங்களையும் திரைப்படங்களையும் பார்த்து, அந்நாட்டைப் பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறேன். இந்திய சேனல்களிலிருந்து ஹிந்தி மொழியை கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒருவருக்கொருவர் கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நான் பாகிஸ்தானில் உள்ள பெண்கள் பற்றி கவலைப்படுவது போல, இந்தியாவில் உள்ள பெண்கள் பற்றியும் கவலைப்படுகிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உள்ள கோடிக்கணக்கான பெண்களுக்கு கல்வி கொடுப்பதன் மூலம் அவர்களது எதிர்காலத்தை மேம்படுத்தலாம். மேலும்  அதன் மூலமே பெண்கள் தங்களே சம்பாதிக்கும் சுய வாய்ப்பை பெற்று தர முடியும் என்று அவர் கூறினார்.