உலகம்

“வீடில்லாததால் காருக்குள் வாழ்ந்து வருகிறேன்” - வீடியோவில் இளம்பெண் வேதனை

EllusamyKarthik

டிக்-டாக் தளத்தில் பொழுதுபோக்கான வீடியோக்களை பெரும்பாலானவர்கள் பார்த்திருக்கக் கூடும். இந்தியாவில் டிக்-டாக் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் உலகில் பெரும்பாலான நாடுகளில் டிக்-டாக் லைவில் உள்ளது. இந்நிலையில் 22 வயதான இளம் பெண் ஒருவர் டிக்-டாக் வீடியோவில் தனது கஷ்டத்தினை பகிர்ந்துள்ளார். 

அந்த வீடியோவை சுமார் 5.1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இளம் பெண்ணின் பெயர் ஆலியா என தெரியவந்துள்ளது. அவர் @oc.liyahh என்ற பயனர் பெயரில் டிக்-டாக் தளத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 

“வாரத்திற்கு 40 மணி நேரம் பணி செய்தும் வீடில்லாமல் காருக்குள் வாழ்ந்து வருகிறேன். காரில்தான் தூங்குகிறேன். ஜிம்மில் குளிக்கிறேன். வேலையிடத்தில் பல் துலக்குகிறேன். அதனால் நான் மிகவும் களைப்பாக உணர்கிறேன்” எனத்தெரிவித்துள்ளார். 

அவரது வீடியோவை சிலர் பொய் என்றும் சொல்லியுள்ளனர். சிலர் அவரை பார்த்து பரிதாபம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.