உலகம்

“ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலை குறித்து நான் மிகவும் கவலை கொள்கிறேன்”: மலாலா

EllusamyKarthik

தலிபான் படையினர் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசஃப்சாய், “அங்குள்ள பெண்களின் நிலை எனக்கு ஆழ்ந்த கவலையை கொடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார். 

“ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதை முழு அதிர்ச்சியுடன் பார்க்கிறேன். பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் நிலை குறித்து நான் மிகவும் கவலை கொள்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள பொதுமக்களை பாதுகாக்க உலகளாவிய சக்திகள் முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

15 வயதில் தலிபான் பயங்கரவாத படையினர் மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தினர். தனது பகுதியில் தலிபான் படையினரால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் உள்ள இடர் குறித்து குரல் கொடுத்ததற்காக இந்த துப்பாக்கிச்சூடு அவர் மீது நடந்தது குறிப்பிடத்தக்கது.