உலகம்

ஹைபர்லூப் போக்குவரத்து வாகனப் போட்டி: ஜெர்மன் மாணவர்கள் முதலிடம்

ஹைபர்லூப் போக்குவரத்து வாகனப் போட்டி: ஜெர்மன் மாணவர்கள் முதலிடம்

webteam

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஹைபர்லூப் அதிவேகப் போக்குவரத்து சாதன போட்டியில் ஜெர்மனியின் மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக குழு வெற்றிப் பெற்றுள்ளது.

விமானம், புல்லட் ரயில்களை விட வேகமான போக்குவரத்துக்காக ராட்சத குழாய்கள் மூல‌ம் 500 கி‌மீ வேகத்துக்கு மேல் செல்‌ல‌க்கூடிய ஹைபர்லூப் போக்குவரத்து முறையை விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் இ‌த்தகைய போக்குவரத்து முறை அமலுக்கு வந்தால் 1000 கி.மீ தொலைவில் உள்ள ஊர்களை அரை மணி நேரத்தில் அடை‌ய முடியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்தகைய போக்குவரத்து முறைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்கா‌வின் கலிபோர்னியாவில் போட்டி நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். அதில் ஜெர்மனியின் மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் மணிக்கு 324 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ஹைபர்லூப் வாகனத்தை உருவாக்கி முதல் இடம் பிடித்தனர்.