உலகம்

கோரத்தாண்டவம் ஆடிய டோரியன் சூறாவளி - நாசா வெளியிட்ட புகைப்படங்கள்

கோரத்தாண்டவம் ஆடிய டோரியன் சூறாவளி - நாசா வெளியிட்ட புகைப்படங்கள்

rajakannan

டோரியன் சூறாவளி பற்றிய புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகின்றது.

அட்லாண்டிக் பெருங்கடலில் சமீபத்தில் உருவான டோரியன் சூறாவளி பஹாமாஸை கடுமையாக தாக்கியது. 220 கிமீ வேகத்தில் சூறாவளிக்கற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது. இந்த சூறாவளி தற்போது அமெரிக்கவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

டோரியன் சூறாவளி தொடர்பாக நாசா பல்வேறு தகவல்களை தொடர்ச்சியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றது. அந்த வகையில் டோரியன் சூறாவளி குறித்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. சூறாவளியை மிகவும் நெருக்கமாக காட்டும் வகையில் அந்த புகைப்படங்கள் உள்ளன. மிகவும் நெருக்கமாக பார்வையில் சூறாவளி மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது.