Indian pilot Smith Machar Reuters
உலகம்

காப்பாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்கள் : நடுவானில் விமானத்தில் நடத்த மோதல்|ஹீரோவான இந்திய விமானி!

இந்தியாவை சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாரின் வீரத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

Praveen Joshva L

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற Boeing 737 விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த விமானம் ஜோர்டான் வான்வெளி பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் இருந்து பொதுவான அவசரநிலை சிக்னல் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தில் சட்டவிரோத தலையீடு அல்லது கடத்தல் போன்ற சூழ்நிலையைக் குறிக்கும் அவசர அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் மிகக் குறுகிய நேரத்தில் சுமார் 14,000 அடி வரை திடீரென கீழே இறங்கியுள்ளது. இதனால் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில், விமானம் அவசர அவசரமாக Tabuk விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

Inidan pilot

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் , ஒரு விமானி விமானத்தை பயணிகளுடன் சேர்த்து தரையில் மோதி வெடிக்க செய்யும் நோக்கத்துடன் சக விமானியை தாக்கியதாவும், பின்னர் விமானத்தில் இருந்த துணிச்சலான பயணிகள் இந்த சதித் திட்டத்தை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட விமானி இந்தியாவை சேர்ந்த கேப்டன் சுமித் மச்சார் என்றும், அவர் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், அசாதாரண துணிச்சலுடன் போராடி விமானத்தை நிலைநிறுத்த உதவியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகளும் சேர்ந்து இந்த செயலை தடுத்ததாகவும், பின்னர் விமானத்தில் இருந்த வேறு இரு விமானிகள் உதவியுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாரின் வீரத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதுடன், மிகப்பெரிய துயரமும் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தெரிவித்துள்ளார். மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டபோதும், படுகாயமடைந்த நிலையிலும் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற மிகுந்த துணிச்சல் பாராட்டப்படக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல “கேப்டன் மச்சாரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடைந்து, மீண்டும் வலிமையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப பிரார்த்திக்கிறேன்” என பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளார்.