உலகம்

மலையில் பின் தொடர்ந்த கரடி: சாமர்த்தியமாக தப்பித்த சிறுவன் - வீடியோ

மலையில் பின் தொடர்ந்த கரடி: சாமர்த்தியமாக தப்பித்த சிறுவன் - வீடியோ

webteam

மிகப்பெரிய கரடி பின் தொடர்ந்தும் பதற்றப்படாமல் சாமர்த்தியமாக தப்பித்த சிறுவனை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வடக்கு இத்தாலியைச் சேர்ந்த அலெசேண்ட்ரோ (12) என்ற சிறுவனும் அவனது மாமாவும் மலைப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது மாமாவை விட்டு விலகிச் சென்ற சிறுவன் மீண்டும் திரும்பி வந்துள்ளான். அப்போது அவனை பின் தொடர்ந்து மிகப்பெரிய கரடி ஒன்றும் வந்துள்ளது.

தூரத்தில் சிறுவனையும், அவனைப் பின் தொடர்ந்து வரும் கரடியையும் பார்த்த சிறுவனின் மாமா பதறிப் போனார்.ஆனால் தன்னை கரடி பின் தொடர்வது தெரிந்தும் பதற்றப்படாத சிறுவன், மெதுவாக நடந்தே வந்துள்ளான். அப்போது திரும்பி கரடியின் இருப்பை உறுதிச் செய்த சிறுவன் கரடியை தொந்தரவு செய்வது போல எதுவும் செய்யாமல் மெதுவாக விலகி வந்துவிட்டான்.

சிறுவனை தன்னுடைய எதிரி அல்ல என உணர்ந்த கரடி அவனை விட்டு விலகிச் சென்றுவிட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. பலரும் சிறுவனின் தைரியத்தை பாராட்டியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள சிறுவனின் மாமா, ''அலெசேண்ட்ரோ ஒரு விலங்கு ஆர்வலர். விலங்குகள் தொடர்பாக அவன் பலவற்றை தேடிப்படிக்கிறான். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கரடியின் குணம் குறித்தும் அதனிடம் இருந்து தப்பும் முறை குறித்தும் படித்தான். அதன்படியே நடந்துக்கொண்டான் எனத் தெரிவித்துள்ளார்