இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை தொடரவுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஏமன் தலைநகர் சனாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஹவுதி அமைப்பைச் சேர்ந்த யாஹ்யா சரியா, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலைத் தொடர 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகக் கூறினார்.
கடந்த சில மாதங்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.