பி.எம்.டபிள்யூ கார் ஒன்று ஆளில்லா தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் சிக்கி விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விபத்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆளில்லாத தண்டவாளத்தை ஒரு பி.எம்.டபிள்யூ கடக்க முயற்சிக்கிறது. அப்போது அந்த காரின் டிரைவர் மிக வேகமாக தண்டவாளத்தின் மேலாக காரை திரும்புகிறார். அங்கே ரயில் வரும் தருணத்தில் ரயில் கேட்டை திருந்து வைத்துள்ளனர். ஆகவே காரின் ஓட்டுநர் பதற்றமே இல்லாமல் பயணிக்கிறார். ஆனால் கார் தண்டவாளத்தைக் கடப்பதற்குள் அதன் மீது ஒரு மெட்ரோ ரயில் வந்து ஏறிவிடுகிறது. கண்ணிமைக்கும் பொழுதில் இந்தக் காட்சிகள் அனைத்து நடந்தேறிவிடுகின்றன.
இந்தச் சம்பவம் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு முன்னதாக நடந்துள்ளது. அதற்கான சிசிடிவி காட்சி தற்போது பகிரப்பட்டு வருகின்றது. இந்த மோதலில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார்.
இதனிடையேதான் இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவைப் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை ட்விட்டரில் பதிவெற்றியுள்ளது. அந்தப் பதிவில் “இது ஒரு சோகமான விளைவை ஏற்படுத்தக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதை காணும் போது மற்ற ஓட்டுநர்கள் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது சுற்றிச்சுற்றி கவனமாக பார்த்த பின் கடக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் “அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் இது நம் அனைவருக்கும் ஒரு நல்ல நினைவூட்டலாக இருக்க வேண்டும். ரயில் தடம் அருகே செல்கையில் கவனம் செலுத்துங்கள். எப்போதும் போக்குவரத்துக்காக வைக்கப்பட்டுள்ள சிக்னல்களுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வீடியோ ட்விட்டரில் இப்போது வைரலாகியுள்ளது. ஓட்டுநர் எப்படி இந்தப் பயங்கரமான விபத்தில் இருந்து தப்பினார் என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.