உலகம்

பணிந்தது ஹாங்காங்: கைதிகளை நாடு கடத்தும் மசோதா வாபஸ்!

webteam

குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை ஹாங்காங் வாபஸ் பெற்றுள்ளது. 

ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் கைதாகும் கைதிகளை, சீனாவுக்கு நாடு கடத்தும் திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலகக் கோரியும் ‌கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஹாங்காங் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்பு, வார இறுதியில் மட்டும் நடைபெற்ற போராட்டங்கள், வார நாட்களிலும் நடைபெற்று வருவதால் அவ்வப்போது போராட்டக் காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் வெடித்து வருகிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் சீன ராணுவமும், ஹாங்காங் காவல்துறையினரும் திணறினர்.

 இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை ஏற்படுத்தவும் கைதிகளை நாடுகடத்தும் திட்ட மசோதா வாபஸ் பெறப்பட்டுள்ளது.