ஹாங்காங்கில் முகமூடி பயன்பாட்டுக்கு தடைவிதித்து கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை கண்டித்து விடிய விடிய போராட்டம் நடைபெற்றது.
ஹாங்காங் நிர்வாகத்தில் சீனா தலையிடக்கூடாது, ஹாங்காங் தலைவர் பதவி விலகவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 மாதங்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்களும், மாணவர்களும் முகமூடி அணிந்தபடி போராட்டத்தில் பங்கேற்பதால், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறையினரால் அடையாளம் காணமுடியவில்லை.
இதனால் முகமூடிகள் அணிய தடை விதித்து அந்நாட்டு தலைவர் கேரி லாம் அவசர சட்டத்தை பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் முகமூடிகள் அணிய தடை விதித்ததை கண்டித்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.